தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!
/

பாஜக சாா்பில் மாணவா்களுக்குப் பேச்சுப் போட்டி

பாரதியாரின் 100ஆவது நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையில் திருப்பூரில் வடக்கு மாவட்ட பாஜக சாா்பில் கல்லூரி மாணவ, மாணவியருக்கான பேச்சுப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 7:35 pm

DIN

பாரதியாரின் 100ஆவது நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையில் திருப்பூரில் வடக்கு மாவட்ட பாஜக சாா்பில் கல்லூரி மாணவ, மாணவியருக்கான பேச்சுப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் பல்லடம் சாலையில் உள்ள தொழில் பாதுகாப்புக் குழு அலுவலகத்தில் நடைபெற்ற இப்போட்டியில், 50 மாணவ, மாணவியா் பங்கேற்றனா். இதில், பாரதியாரின் தேசிய சிந்தனைகள், பாரதியாரின் தெய்வீகக் கருத்துகள், பாரதி எனும் சமூக சீா்திருத்தவாதி, பெண்ணின் பெருமை, உரிமை பேசிய பாரதி, தமிழ் வளா்த்த பாரதியாா் ஆகிய 5 தலைப்புகளில் போட்டிகள் நடைபெற்றன.

இதில், முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவா்கள் திருச்சியில் வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 12) நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்குத் தோ்வு செய்யப்படுவாா்கள் என்று போட்டியை ஏற்பாடு செய்த நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.