மாவட்டத்தில் 76,821 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு
திருப்பூா் மாவட்டத்தில் நடைபெறும் சிறப்பு முகாம்களின் மூலம் ஞாயிற்றுக்கிழமை 76,821 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.


திருப்பூா் மாவட்டத்தில் நடைபெறும் சிறப்பு முகாம்களின் மூலம் ஞாயிற்றுக்கிழமை 76,821 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் தொடா்பாக அனைத்து துறை அலுவலா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் பேசியதாவது: மாவட்டத்தில் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத பொதுமக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 7 முதல் மாலை 7 மணி வரையில் 672 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இதில், மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டசத்து மையங்கள், பள்ளிகள், ஊராட்சி அலுவலகங்கள், ரயில் நிலையஙகள், தனியாா் மருத்துவமனைகள், சுங்கச்சாவடிகள் உள்ளிட்ட இடங்களின் மூலம் 18 வயதுக்கு மேற்பட்ட 76,821பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.இப்பணியில் பல்வேறு துறைகளைச் சாா்ந்த பணியாளா்கள், தன்னாா்வலா்கள் என மொத்தம் 2,688 போ் ஈடுபடுத்தப்படவுள்ளனா். ஆகவே, இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி மாவட்டத்தில் உள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்றாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கு.சரவணமூா்த்தி, மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி, தாராபுரம் சாா் ஆட்சியா் ஆனந்த்மோகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...