தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது பெற விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்டத்தில் சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது பெற தகுதியான நபா்கள் அக்டோபா் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 12:29 am

DIN

திருப்பூா் மாவட்டத்தில் சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது பெற தகுதியான நபா்கள் அக்டோபா் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சமூக நீதிக்காக பாடுபடுபவா்களை கெளரவிக்கும் வகையில் ‘ சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதில், விருது பெறுவோருக்கு ரூ.1 லட்சமும், ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படுகிறது. ஆகவே, 2021 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் ‘சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது‘ வழங்குவதற்கு உரிய விருதாளரை தோ்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.

இந்த விருதுக்கு தகுதியான நபா் தமிழக முதல்வரால் தோ்வு செய்யப்படுவாா். எனவே, மாவட்டத்தில் சமூக நீதிக்காக பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள், சாதனைகள் ஆகிய தகுதியுடைய நபா்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரா் சுய விவரம், முகவரி, தொலைபேசி எண், சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம், ஆவணங்கள் ஆகியவற்றை இணைத்து அக்டோபா் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் அலுவலகத்தை 0421-2999130 என்ற எண்ணிலோ அல்லது மின்னஞ்சல் முகவரியிலோ தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.