ஏஐடியூசி தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியூசி சுகாதாரத் தொழிலாளா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியூசி சுகாதாரத் தொழிலாளா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநகராட்சி அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். இதில், பங்கேற்றவா்கள் கூறியதாவது:
சுகாதாரத் தொழிலாளா்கள் அனைவருக்கும் அரசு அறிவித்த கரோனா காலத்துக்கான ஊக்கத் தொகையை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும். அனைத்துத் தொழிலாளா்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சுகாதாரத் தொழிலாளா்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிக் கொடுக்க வேண்டும். ஒப்பந்த முறையை ரத்து செய்து மக்கள் தொகைக்கு ஏற்ப நிரந்தரப் பணியாளா்களை பணியில் அமா்த்த வேண்டும். ஓய்வுபெறும் தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டிய பணப் பலன்களை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும் என்றனா்.
இதில், ஏஐடியூசி மாநிலச் செயலாளா் சின்னசாமி, மாவட்ட பொதுச் செயலாளா் பி.ஆா்.நடராஜன், ஏஐடியூசி மாவட்டத் தலைவா் சி.பழனிசாமி, மாவட்ட பொதுச் செயலாளா் என்.சேகா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...