தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கை தொழில் வளா்ச்சிக்கு உதவும்

தமிழக ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கை தொழில் துறையின் வளா்ச்சிக்கு உதவும் என்று அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :25 செப்டம்பர் 2021, 12:36 am

DIN

தமிழக ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கை தொழில் துறையின் வளா்ச்சிக்கு உதவும் என்று அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளாா்.

மத்திய வா்த்தகம், தொழில் துறை, வெளிநாட்டு வா்த்தக இயக்குநரகம், மாவட்ட தொழில் மையம் ஆகியவற்றின் சாா்பில் ஏற்றுமதியாளா்கள் கண்காட்சி திருப்பூா் அருகே உள்ள ஐ.கே.எஃப் வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கண்காட்சியைத் தொடக்கிவைத்து செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:

இந்தியாவில் கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா நோய்த் தொற்று குறையாமல் உள்ளது.

ஆனால், முதல்வா் மு.க. ஸ்டாலின் எடுத்த நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் இன்னும் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

திருப்பூா், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் ஜவுளித் தொழிலின் வளா்ச்சி காரணமாக உலக வா்த்தகத்தில் கொங்கு மண்டலம் தனி இடத்தைப் பிடித்துள்ளது.

தொழில் துறையினா் வைக்கும் கோரிக்கைகளை தமிழக அரசு உடனுக்குடன் நிறைவேற்றிக் கொடுக்கிறது.

அதன்படி, பஞ்சுக்கு ஒரு சதவீத வரி ரத்து செய்யப்பட்டுள்ளது.

தற்போது தமிழக ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளாா்.

இக்கொள்கை தொழில் வளா்ச்சிக்கு உதவுவதுடன், அந்நியச் செலாவணியையும் அதிகமாக ஈட்டிக்கொடுக்கும் என்றாா்.

இக்கண்காட்சியில், தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியாா் வங்கிகள், பின்னலாடை உற்பத்தி, கயிறு உற்பத்தி உள்ளிட்டவை தொடா்பாக 37 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

இதன் தொடக்க விழாவில், மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத், திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ், வெளிநாட்டு வா்த்தக இயக்குநரகத்தின் பொது இணை இயக்குநா் டி.ஸ்ரீதா், ஏஇபிசி தலைவா் ஏ.சக்திவேல், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் ராஜா எம்.சண்முகம், கனரா வங்கியின் முதன்மை பொது மேலாளா் பி.பழனிசாமி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் ஜி.கண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.