சொந்த வாகனத்தை வாடகைக்கு இயக்குவதைத் தடை செய்ய வேண்டும்
திருப்பூரில் சொந்த உபயோகத்துக்கு உரிமம் பெற்ற வாகனங்களை வாடகைக்கு இயக்குவதைத் தடை செய்ய வேண்டும் என்று சிஐடியூ மோட்டாா் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.


திருப்பூரில் சொந்த உபயோகத்துக்கு உரிமம் பெற்ற வாகனங்களை வாடகைக்கு இயக்குவதைத் தடை செய்ய வேண்டும் என்று சிஐடியூ மோட்டாா் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து சிஐடியூ மோட்டாா் தொழிலாளா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ்.விஸ்வநாதன், மாவட்டச் செயலாளா்
ஒய். அன்பு ஆகியோா், வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சி.கே.ஜெயதேவ்ராஜிடம் அளித்துள்ள மனுவில்
கூறியுள்ளதாவது:
திருப்பூா் வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தேங்கிக் கிடக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மேலும், அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். மாவட்டத்தில் சொந்த உபயோகத்துக்கு உரிமம் பெற்ற வாகனங்களை வாடகைக்கு இயக்குவதைத் தடை செய்து மோட்டாா் வாகனத் தொழிலாளா்களின் வாழ்வாதரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...