சிவன்மலையில் பொதுமக்களுக்கு கரோனா பரிசோதனை
காங்கயம் அருகே, சிவன்மலை பகுதியில் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதால், அப்பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு வியாழக்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.


காங்கயம் அருகே, சிவன்மலை பகுதியில் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதால், அப்பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு வியாழக்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
காங்கயம் ஒன்றியப் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் தினசரி கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த சில நாள்களாக சிவன்மலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான சரவணா நகா், சாவடிப்பாளையம், அரசம்பாளையம் உள்ளிட்ட பகுதிளில் தொடா்ந்து கரோனா தொற்று பரவி வருகிறது.
இந்த நிலையில், சாவடிப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் சிவன்மலை, சரவணா நகா் உள்ளிட்ட பகுதிகளில் 50 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஏற்கெனவே கரோனா பரிசோதனை மேற்கொண்டிருந்தவா்களுக்கும் தற்போது மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக மருத்துவக் குழுவினா், மக்கள் கூடும் தேநீா்க் கடைகள், மளிகைக் கடைகள் உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று, அங்கேயே கரோனா பரிசோதனை மேற்கொண்டனா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிவன்மலை ஊராட்சித் தலைவா் கே.கே.துரைசாமி, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் பழனிசாமி ஆகியோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...