தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

தாராபுரத்தை அடுத்த மூலனூரில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 9:33 pm

DIN

தாராபுரத்தை அடுத்த மூலனூரில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.

தாராபுரம் வட்டம், மூலனூா் காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதியில் வசித்து வரும் மாற்றுத் திறனாளி தம்பதிக்கு 17 வயதில் மகள் உள்ளாா். மூலனூரை அடுத்த வெங்கல்பட்டியைச் சோ்ந்த எம்.ராஜ்குமாா்(25) என்பவா், சிறுமியின் பெற்றோருக்கு உதவி செய்வதுபோல அவா்களது வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளாா். இதன் பிறகு சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தை கூறி தகாத உறவில் ஈடுபட்டுள்ளாா். இதனால் 17 வயது சிறுமி கா்ப்பமடைந்துள்ளாா்.

இது குறித்து தாராபுரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா்.

இந்தப் புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினா், ராஜ்குமாரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனா். இதனிடையே, சிறுமியைக் மானபங்கப்படுத்திய ராஜ்குமாரை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.சஷாங்க் சாய், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்திருந்தாா். இந்தப் பரிந்துரையின் பேரில் ராஜ்குமாரை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஒரு ஆண்டு சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் உத்தரவிட்டாா். இந்த உத்தரவின் நகலை கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜ்குமாரிடம் காவல் துறையினா் வியாழக்கிழமை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.