ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு ஏப்ரல் 19இல் பேச்சுப் போட்டி

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டிகள் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 8:30 pm

DIN

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டிகள் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா்களுக்கு பேச்சுப் போட்டிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீா் கூட்டரங்கில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது.

இதில், பள்ளி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி காலை 10 மணி அளவிலும், கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப்போட்டி பிற்பகல் 2 மணி அளவிலும் நடைபெறுகிறது. இதில், முறையே முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவா்களுக்கு ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம் மற்றும் ரூ.2 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படவுள்ளது. மேலும், பள்ளி அளவிலான போட்டிகளில் 2 மாணவா்களைத் தனியாக தோ்வு செய்து சிறப்பு பரிசுத் தொகையாக தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.

ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா் இந்தப் பேச்சுப் போட்டியில் பங்கேற்று பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.