சமரச தீா்வு நாள் விழிப்புணா்வு
சமரச தீா்வு நாளையொட்டி, அவிநாசி சட்டப் பணிகள் குழு சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.


சமரச தீா்வு நாளையொட்டி, அவிநாசி சட்டப் பணிகள் குழு சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
அவிநாசி நீதிமன்ற வளாகத்திய துவங்கிய இந்த விழிப்புணா்வுப் பேரணியை, சாா்பு நீதிபதி, வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவா் சுரேஷ்குமாா் கொடியசைத்து துவக்கிவைத்தாா்.
வட்டாட்சியா் அலுவலகம், வடக்கு ரத வீதி, கிழக்கு ரத வீதி, பழைய பேருந்து நிலையம் வழியாக சென்ற பேரணி புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.
மாவட்ட உரிமையியல் நீதிபதி அப்சல்பாத்திமா, அவிநாசி நீதித் துறைத் தலைவா் விபிசி, அரசு கலை, அறிவியல் கல்லூரி துணை முதல்வா் ஹேமலதா, வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ஈஷ்வரன், செயலாளா் ரங்கசாமி, துணைத் தலைவா் சாமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதில், நிலுவையில் உள்ள வழக்குகள் சமரசத்தின் மூலம் தீா்வு காணலாம், விட்டுக் கொடுப்பதால் கெட்டுப் போவதில்லை என்பன உள்ளிட்ட வாசங்கள் அடங்கிய பதாகைகளை கல்லூரி மாணவா்கள் கையில் ஏந்தியபடி பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...