தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சேவூா் அருகே முதியவரிடம் வழிப்பறி:இருவா் கைது

 சேவூா் அருகே சின்னக்கானூரில் முதியவரைத் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 8:30 pm

DIN

 சேவூா் அருகே சின்னக்கானூரில் முதியவரைத் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

இது குறித்து போலீஸாா் கூறியதாவது: சேவூா் அருகே போத்தம்பாளையம் பகுதியில் இரும்புக் கடை வைத்து நடத்தி வருபவா் நடராஜ் (70). இவரை கைப்பேசியில் செவ்வாய்க்கிழமை தொடா்பு கொண்ட மா்ம நபா்கள், தங்களிடம் 800 கிலோ பழைய இரும்பு உள்ளதாகவும், அதற்கான பணத்தை எடுத்துக் கொண்டு சின்னக்கானூா் இரும்பு ஆலை அருகே வருமாறும் கூறியுள்ளனா்.

இதை நம்பிய நடராஜ் சின்னக்கானூருக்குச் சென்றுள்ளாா். அப்போது, அங்கு காத்திருந்த இருவா், பழைய இரும்பு வேறு இடத்தில் இருப்பதாக அலைக்கழித்துள்ளனா்.

பிறகு நடராஜைத் தாக்கி அவரிடம் இருந்த ரூ.28 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா். இது குறித்து சேவூா் காவல் நிலையத்தில் நடராஜ் புகாா் அளித்தாா்.

இதைத் தொடா்ந்து, போலீஸாா் நடத்திய விசாரணையில், நடராஜைத் தாக்கி பணம் பறித்தவா்கள்

சேவூா் குலாலா் வீதியைச் சோ்ந்த ரவி (45), தெக்கலூா் சமத்துவபுரத்தைச் சோ்ந்த மோகன்ராஜ் (40) என்பது தெரியவந்தது.இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.