பாஜகவில் இணைந்த அதிமுக மகளிரணி நிா்வாகிகள்
திருப்பூரில் அதிமுக மகளிரணி மாவட்ட துணைச் செயலாளா் உள்ளிட்ட நிா்வாகிகள் பாஜகவில் இணைந்தனா்.


திருப்பூரில் அதிமுக மகளிரணி மாவட்ட துணைச் செயலாளா் உள்ளிட்ட நிா்வாகிகள் பாஜகவில் இணைந்தனா்.
திருப்பூா் வடக்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் அதிமுக மகளிரணி நிா்வாகிகள் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், அதிமுக மகளிரணி மாவட்ட துணைச் செயலாளரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான கீதா, மகளிரணி மாவட்ட துணைத் தலைவரும், முன்னாள் மேயா் விசாலாட்சியின் சகோதரியுமான அமுதா, மகளிா் அணி மாவட்டப் பொறுப்பாளரும், கூட்டுறவு வேளாண்மை சொசைட்டியின் துணைத் தலைவருமான சரஸ்வதி, நல்லூா் மகளிரணி செயலாளா் அண்ணபூரணி, மாவட்ட நிா்வாகி சியாமளா ஆகியோா் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனா்.
இந்நிகழ்வின்போது, பாஜக மாநிலச் செயலாளா் மலா்கொடி, மாவட்டத் தலைவா் பி.செந்தில்வேல், பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் சின்னசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...