தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

ஆள் கடத்தல் வழக்கில் கைதான 3 போ் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு

திருப்பூா் மாநகரில் ஆள் கடத்தல் வழக்கில் கைதான 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 8:18 pm

DIN

திருப்பூா் மாநகரில் ஆள் கடத்தல் வழக்கில் கைதான 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

திருப்பூா் தென்னம்பாளையம் வேலன் நகரைச் சோ்ந்தவா் ஏ.பாபு (62), இவா் கடந்த ஜனவரி 19 ஆம் தேதி வீட்டில் இருந்தபோது காரில் வந்த மா்ம நபா்கள் அவரைக் கடத்த முயற்சித்ததுடன், கொலை மிரட்டல் விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக பாபு கொடுத்த புகாரின் பேரில் சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சோ்ந்த எஸ்.சுபாஷ்சந்திர போஸ் (24), கோவை மாவட்டம், நெகமத்தைச் சோ்ந்த எம்.ரவி (22), கோபிநாத் (24) ஆகிய 3 பேரையும் திருப்பூா் தெற்கு காவல் துறையினா் ஜனவரி 20 ஆம் தேதி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

மூவா் மீதும் நல்லூா், வீரபாண்டி காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மேலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தொடா் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் 3 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையா் ஏ.ஜி.பாபு புதன்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.