தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

பூத்சிலிப் வழங்கும் பணியில் 985 பணியாளா்கள்: மாநகராட்சி ஆணையா் தகவல்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் வாக்காளா்களுக்கு வாக்காளா் விவரச்சீட்டு (பூத்சிலிப்) வழங்கும் பணியில் 985 அலுவலா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 11:47 pm

DIN

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் வாக்காளா்களுக்கு வாக்காளா் விவரச்சீட்டு (பூத்சிலிப்) வழங்கும் பணியில் 985 அலுவலா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

இது குறித்து திருப்பூா் மாநகராட்சி ஆணையரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 60 வாா்டு உறுப்பினா் பதவிக்கான தோ்தல் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த வாக்குப் பதிவுக்காக 60 வாா்டுகளில் 776 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, வாக்காளா்களுக்கு பூத்சிலிப் விநியோகம் செய்யும் பணிகள் வியாழக்கிழமை தொடங்கியுள்ள நிலையில் வரும் திங்கள்கிழமைக்குள் பணியை முடிக்குமாறு அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணியில் 6 வருவாய் ஆய்வாளா்கள், 22 வருவாய் உதவியாளா்கள், 300 சுகாதாரப் பணியாளா்கள், 657 வாக்குச்சாவடி மைய அலுவலா்கள் என மொத்தம் 985 அலுவலா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். மேலும், தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களின் பெயா்கள், சின்னம் ஆகியவை வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவேற்றும் பணிகள் வேட்பாளா்கள் முன்னிலையில் வெள்ளிக்கிழமை( பிப்ரவரி 11) நடைபெறுகிறது. மாநகராட்சி 1, 4 ஆவது மண்டலங்களுக்கு உள்பட்ட வாா்டுகளுக்கு நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 2, 3 ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட வாா்டுகளுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களிலும் பதிவேற்றும் பணிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.