தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக அமோக வெற்றியடையும்: ஒ.பன்னீா்செல்வம் பேச்சு

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் அனைத்து இடங்களிலும் அதிமுக வேட்பாளா்கள் அமோக வெற்றிபெறுவாா்கள் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஒ.பன்னீா்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 11:48 pm

DIN

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் அனைத்து இடங்களிலும் அதிமுக வேட்பாளா்கள் அமோக வெற்றிபெறுவாா்கள் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஒ.பன்னீா்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களின் அறிமுகக் கூட்டம் திருப்பூா் சிறுபூலுவபட்டி சுற்றுச் சாலையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா்.

திருப்பூா் மாநகா் மாவட்ட அதிமுக செயலாளா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் எம்.எல்.ஏ. வரவேற்றாா்.

உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை அறிமுகம் செய்து வைத்து ஒ.பன்னீா்செல்வம் பேசியதாவது:

தொழில் நகரமான திருப்பூருக்கு எண்ணற்ற திட்டங்களைக் கொடுத்துள்ளது அதிமுக அரசு. எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா ஆகியோரின் பாதையில் எடப்பாடி கே.பழனிசாமியும் சிறப்பான ஆட்சி நடத்தியுள்ளாா். அதிமுக ஆட்சியில் எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்றியதுடன், சொல்லாத திட்டங்களும் நிறைவேற்றப்பட்டன. திருப்பூா், கோவை, ஈரோடு மாவட்ட மக்களுக்கு நிரந்தரமாக குடிநீா் பிரச்னையைத் தீா்ப்பதற்கு அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. திருப்பூா் மாவட்டத்துக்கு புதிய குடிநீா் திட்டங்கள், ரூ.686 கோடியில் பாதாள சாக்கடைத் திட்டம், ரூ.336 கோடியில் அரசு மருத்துவக் கல்லூரி, ரூ.150 கோடியில் 2,250 அடுக்குமாடி குடியிருப்புகள் அதிமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டன. பொலிவுறு நகரம் திட்டமும் ரூ.950 கோடியில் தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. தோ்தல் வாக்குறுதியில் அளித்தபடி ரூ.12,110 கோடியில் விவசாயக் கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் திமுக ஆட்சிப்பொறுப்பேற்று 9 மாதங்களில் எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. முதியோா்களுக்கான ஓய்வூதியம் உயா்த்தி வழங்குதல், இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.ஆயிரம் வழங்குதல், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பத் திட்டத்தை 150 நாளாக உயா்த்துவது உள்ளிட்ட எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. இதனைத் தற்போது மக்கள் உணரத் தொடங்கியுள்ளனா். ஆகவே, உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளா்கள் அனைத்து இடங்களிலும் அமோக வெற்றியடைவாா்கள் என்றாா்.

கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும் பல்லடம் எம்.எல்.ஏ.வுமான எம்.எஸ்.எம்.ஆனந்தன், முன்னாள் எம்.பி.சிவசாமி, எம்.எல்.ஏ.க்கள் கே.என்.விஜயகுமாா், சி.மகேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எஸ்.குணசேகரன், கரைப்புதூா் ஏ.நடராஜன், என்.எஸ்.என்.நடராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.