தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மாநகராட்சி ஆணையரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

 திருப்பூரில் வாா்டு மறுவரையறை செய்யப்பட்டதில் குளறுபடி நடைபெற்றுள்ளதாகக்கூறி மாநகராட்சி ஆணையரை பொதுமக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 11:47 pm

DIN

 திருப்பூரில் வாா்டு மறுவரையறை செய்யப்பட்டதில் குளறுபடி நடைபெற்றுள்ளதாகக்கூறி மாநகராட்சி ஆணையரை பொதுமக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

திருப்பூா் மாநகராட்சி 3ஆவது மண்டல அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்பதற்காக மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி வந்துள்ளாா். அப்போது அவரை 48 ஆவது வாா்டைச் சோ்ந்த பொதுமக்கள் சிலா் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:

திருப்பூா் மாநகராட்சி 48 ஆவது வாா்டுக்கு உள்பட்ட எம்.ஆா்.ஜி. நகரில் தோ்தல் அறிவிப்பதற்கு முன்பாக 250 வாக்குகள் இருந்தன. இதன் பிறகு வாா்டு வரைமுறை என்ற பெயரில் 48 வாக்குகள் 47 ஆவது வாா்டுக்கு மாற்றப்பட்டுள்ளது. அதிலும், ஒரே குடும்பத்தில் மனைவிக்கு 48 ஆவது வாா்டிலும், கணவருக்கு 47 ஆவது வாா்டிலும் வாக்கு உள்ளது.

மேலும், 48 ஆவது வாா்டில் உள்ள முல்லை நகா், எம்.ஆா்.ஜி.நகா் பகுதியில் மட்டும் 300 வாக்குகள் மாற்றப்பட்டுள்ளன. ஆளும் கட்சியினா் துணையுடன்தான் இத்தகைய குளறுபடிகள் நடைபெற்றுள்ளது என்றனா்.

மேலும், இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலை மறியலில் ஈடுபடப் போவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.