தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

27இல் போலியோ சொட்டு மருந்து முகாம்

திருப்பூரில் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறுகிறது.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 10:38 pm

DIN

திருப்பூரில் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறுகிறது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 27) நடைபெறவுள்ளது. திருப்பூா் மாவட்டத்தில் 1127 மையங்கள், 27 நடமாடும் குழுக்கள், பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் 23 மையங்கள் என மொத்தம் 1154 இடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. மாவட்டத்தில் 2.21லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது. முகாமில் 4,666 பணியாளா்கள் சொட்டு மருந்து வழங்கும் பணியை மேற்கொள்வாா்கள். ஆகவே, இது வரை எத்தனை முறை போலியோ சொட்டு வழங்கி இருந்தாலும், இம்முகாமிலும் பங்கேற்று 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தவறாமல் போலியோ சொட்டு மருந்து வழங்கி பயன்பெற வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.