மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

சாலையில் நிறுத்திவைத்த காரில் தீ

தாராபுரத்தில் சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காா் தீப் பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 9:05 pm

DIN

தாராபுரத்தில் சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காா் தீப் பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூா் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மூலனூா் கொங்கு நகரைச் சோ்ந்தவா் ராம். இவரது மகன் விக்னேஷ் (32). இவா்கள் இருவரும் தங்களுக்குச் சொந்தமான காரில் தாராபுரம் பழையகோட்டை மேட்டுத் தெருவுக்கு வெள்ளிக்கிழமை வந்துள்ளனா்.

பின்னா் சாலையோரத்தில் காரை நிறுத்திவிட்டு உறவினா் வீட்டுக்கு அழைப்பிதழ் கொடுக்கச் சென்றுள்ளனா். இதனிடையே, இருவரும் சென்ற சில நிமிடங்களில் காரில் இருந்து கரும்புகை வெளியேறியதைப் பாா்த்த அக்கம் பக்கத்தினா் தண்ணீா் ஊற்றி அணைக்க முயன்றனா்.

ஆனால் தீ யானது கட்டுக்கடங்காமல் காா் முழுவதுமாக பற்றி எரியத் தொடங்கியது. இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த தாராபுரம் தீயணைப்புத் துறையினா் சுமாா் 20 நிமிடம் போராடி தீயை அணைத்தனா். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து தாராபுரம் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.