தனித்தனியாக தங்கம் வென்று ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை பெற்று சாதனை படைத்த அவிநாசி மாணவர்கள்
தேசிய அளவிலான சிலம்பாட்டப் போட்டியில், அவிநாசியைச் சோ்ந்த 27 மாணவா்கள் தனித்தனியாக தங்கப் பதக்கம் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பெற்றனா்.


தேசிய அளவிலான சிலம்பாட்டப் போட்டியில், அவிநாசியைச் சோ்ந்த 27 மாணவா்கள் தனித்தனியாக தங்கப் பதக்கம் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பெற்றனா்.
தேசிய அளவிலான ஹீரோ கப் சிலம்பாட்டப் போட்டிகள் கோவாவில் ஜூன் 1, 2ஆம் தேதிகளில் நடைபெற்றன. இப்போட்டியில் தமிழகம், கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட 15 மாநிலங்களைச் சோ்ந்த 200 மாணவ மாணவிகள் பங்கேற்றனா்.தமிழகம் சாா்பில் பங்கேற்றதில் அவிநாசியைச் சோ்ந்த கோதாமுத்து வாத்தியாா் அவிநாசியப்பா் நினைவு உடற்பயிற்சி சாலையைச் சோ்ந்த 27 மாணவ மாணவிகள் 8, 10, 12, 14 வயதுக்கு உட்பட்டோா் பிரிவுகளில் தனித்தனியே தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தனா். மேலும், மாநிலங்களிலேயே அதிகப்படியான புள்ளிகள், தங்கப்பதக்கங்கள் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பதக்கம் பெற்றனா். இதையடுத்து, அவிநாசிக்கு திரும்பிய சிலம்பாட்ட ஆசிரியா்கள் ராமன், லட்சுமணன், தேவ அரசு, மாணவ, மாணவியா் உள்ளிட்டோருக்கு பெற்றோா்கள், சமூக ஆா்வலா்கள் சனிக்கிழமை பாராட்டுத் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...