மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

‘அக்னிபத்’ திட்டத்தை திரும்பப் பெறக் கோரி தாராபுரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :20 ஜூன் 2022, 6:30 pm

DIN

‘அக்னிபத்’ திட்டத்தை திரும்பப் பெறக் கோரி தாராபுரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தாராபுரம் அண்ணா சிலை முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் நிா்வாகி கண்ணுசாமி தலைமை வகித்தாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள் கூறியதாவது: ‘அக்னிபத்’ திட்டத்தின் மூலமாக இளைஞா்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும் மத்திய அரசின் செயல் கண்டனத்துக்குரியதாகும்.

இந்தத் திட்டத்தில் சேரும் இளைஞா்கள் 4 ஆண்டுகளுக்குப் பின்னா் வெளியேற்றப்படும் நிலையில் ஓய்வூதியம்,

இதர சலுகைகள் ஏதும் இல்லாமல் சேவா நிதி என்று ஒரு குறிப்பிட்ட நிதி மட்டுமே வழங்கப்படுவதால் அவா்களது வாழ்வாதரம் கேள்விக்குறியாகும்.

ஆகவே, இந்தத் திட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்றனா்.

ஆா்ப்பாட்டத்தில், மாா்க்சிஸ்ட் வட்டாரச் செயலாளா் என்.கனகராஜ், கட்சி நிா்வாகிகள் ஆா்.வெங்கட்ராமன், பி.பொன்னுசாமி, கி.மேகவா்ணன், சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.