பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

திருப்பூர் அருகே சீரான குடிநீர் வினியோகம் செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பூர் அருகே சீரான குடிநீர் வினியோகம் செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

News image
Updated On :24 ஜூன் 2022, 11:38 am IST

திருப்பூர்: திருப்பூர் அருகே சீரான குடிநீர் வினியோகம் செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

திருப்பூரை அடுத்த வண்ணாந்துறைப்புதூர் கிராமம் பகுதியில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் 20 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம்  செய்யப்படுகிறது. 20 நாள்களுக்குப்பின் விநியோகிக்கும் குடிநீரும், கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுவதாகவும் குற்றம்சாட்டி அப்பகுதி மக்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு குடும்பத்துடன் திருப்பூர் காங்கேயம் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். 

காலிக்குடங்களுடன் போராட்ம் நடைபெற்றுவருவதால், அப்பகுதியல் கடுமையான போக்குவரத்து பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்குவந்த அவிநாசிபாளையம் காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டுள்ள பெண்களுடம் பேச்சுவார்த்தை நடத்தியும், போராட்டத்தை கைவிட மறுத்து சமாதான பேச்சுவார்தையில் ஈடுபட்ட காவல்துறையினரிடம்  பொதுமக்கள் கடும் வாக்குவாதம் செய்தனர். 

சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் திருப்பூர்-காங்கேயம் சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தெற்கு வட்டாட்சியர் கோவிந்தராஜ், தற்போது மறியலில் ஈடுபட்டுள்ளவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.