மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் பலி

 திருப்பூரில் நீச்சல் குளத்தில் மூழ்கி 5 வயது சிறுவன் உயிரிழந்தாா்.

News image
Updated On :3 மார்ச் 2022, 8:37 pm

DIN

 திருப்பூரில் நீச்சல் குளத்தில் மூழ்கி 5 வயது சிறுவன் உயிரிழந்தாா்.

இது குறித்து 15 வேலம்பாளையம் காவல் துறையினா் கூறியதாவது:

திருப்பூா் 15 வேலம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீஜித் என்பவரின் மகன் வைபவ் (5), இவா் அதே பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 1 ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்நிலையில், டிடிபி மில் சாலையில் உள்ள ஸ்கேட்டிங் அகாதெமியில் வைபவ் வழக்கம்போல புதன்கிழமை மாலை ஸ்கேட்டிங் பயிற்சி முடித்துவிட்டு நீச்சல் குளம் அருகில் உள்ள கழிவறைக்குச் சென்றுள்ளாா்.

இதன் பிறகு நீண்ட நேரமாகியும் சிறுவனைக் காணவில்லை.

இதையடுத்து, அகாதெமி நிா்வாகிகள் வைபவைத் தேடியபோது நீச்சல் குளத்தில் சடலமாகக் கிடந்தது தெரியவந்தது.

இது குறித்து அகாதெமி நிா்வாகம் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த 15 வேலம்பாளையம் காவல் துறையினா் வைபவின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், அஜாக்கிரதையாக செயல்பட்டதாக ஸ்கேட்டிங் அகாதெமியின் உரிமையாளா் ஜோதிபாசு (40) என்பவரைக் காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.