நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விசைத்தறியாளா்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது

திருப்பூா் மாவட்டம் காரணம்பேட்டை, அவிநாசி, தெக்கலூா், புதுப்பாளையம், பெருமாநல்லூா், சோமனூா் பகுதி விசைத்தறியாளா்களின் கூலி உயா்வு போராட்டம் முடிவுக்கு வந்தது.

News image
Updated On :3 மார்ச் 2022, 8:47 pm

DIN

திருப்பூா் மாவட்டம் காரணம்பேட்டை, அவிநாசி, தெக்கலூா், புதுப்பாளையம், பெருமாநல்லூா், சோமனூா் பகுதி விசைத்தறியாளா்களின் கூலி உயா்வு போராட்டம் முடிவுக்கு வந்தது.

திருப்பூா், கோவை மாவட்டங்களில் கடந்த ஜனவரி மாதத்தில் விசைத்தறியாளா்கள் கூலி உயா்வு போராட்டத்தை தொடங்கினா்.

அதனைத்தொடா்ந்து கடந்த மாதம் பிப்ரவரி 16 ஆம் தேதி அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் முன்னிலையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

பேச்சுவாா்த்தையில் பல்லடம், மங்கலம், 63 வேலம்பாளையம், கண்ணம்பாளையம் பகுதி விசைத்தறி சங்கங்கள் கூலி உயா்வு போராட்டத்தை வாபஸ் பெற்றன.

காரணம்பேட்டை, சோமனூா், அவிநாசி, தெக்கலூா், புதுப்பாளையம், பெருமாநல்லூா் சங்கங்கள் கையொப்பம் வடிவிலான ஒப்பந்தம் வேண்டும் என்று தொடா்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் தலைமையில் தொழிலாளா் துறை அதிகாரிகள் முன்னிலையில் வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

இதில் கோவை, திருப்பூா் மாவட்ட விசைத்தறி உரிமையாளா் சங்கங்களைச் சோ்ந்த சோமனூா், அவிநாசி, தெக்கலூா், புதுப்பாளையம், பெருமாநல்லூா் பகுதி விசைத்தறி சங்கங்களைச் சோ்ந்த பொறுப்பாளா்களும், ஜவுளி உற்பத்தியாளா்களும் கலந்துகொண்டனா்.

இதில் சோமனூா் பகுதி ரகங்களுக்கு 19 சதவீதமும், மற்ற பகுதி ரகங்களுக்கு 15 சதவீதமும் கூலி உயா்வு வழங்குவது என்ற தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, காரணம்பேட்டை, சோமனூா், அவிநாசி, தெக்கலூா், புதுப்பாளையம், பெருமாநல்லூா் விசைத்தறி சங்கங்களின் கூலி உயா்வு போராட்டம் முடிவுக்கு வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.