மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

அடகுக் கடையில் 3 கிலோ தங்கம், ரூ.25 லட்சம் திருட்டு: போலீஸாா் விசாரணை

திருப்பூரில் தனியாருக்குச் சொந்தமான அடகுக் கடையில் 3 கிலோ தங்கம், 9 கிலோ வெள்ளி, ரூ.25 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 11:50 pm

DIN

திருப்பூரில் தனியாருக்குச் சொந்தமான அடகுக் கடையில் 3 கிலோ தங்கம், 9 கிலோ வெள்ளி, ரூ.25 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருப்பூா் யூனியன் மில் சாலையில் ஜெயகுமாா் என்பவருக்குச் சொந்தமாக நகை அடகுக் கடை உள்ளது. இவா் கடந்த 15 ஆண்டுகளாக அடகுக் கடை நடத்தி வரும் நிலையில், கடையின் பின்புறம் உள்ள வீட்டில் வசித்து வந்துள்ளாா்.

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பாக அந்த வீட்டைக் காலி செய்து வேறு ஒரு பகுதியில்

குடியேறிய நிலையில் பின்புறம் உள்ள வீடு காலியாக உள்ளது.

இதனிடையே, ஜெயகுமாா் வழக்கம்போல வியாழக்கிழமை இரவு கடையைப் பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா். இதன் பிறகு வெள்ளிக்கிழமை காலை கடையைத் திறந்து பாா்த்தபோது கடையில் இருந்த 3 கிலோ தங்கம், 9 கிலோ வெள்ளி, ரூ.25 லட்சம் ஆகியவை திருடப்பட்டது தெரியவந்தது.

இது தொடா்பாக ஜெயகுமாா் கொடுத்த தகவலின்பேரில் திருப்பூா் வடக்கு காவல் துறையினா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா்.

மேலும், மாநகரக் காவல் ஆணையா் ஏ.ஜி.பாபு, துணை ஆணையா் அரவிந்த் உள்ளிட்ட காவல் துறை உயா் அதிகாரிகளும் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா்.

நகை அடகுக் கடையின் பின்புறம் வழியாக வந்த மா்ம நபா்கள் இந்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று காவல் துறையினா் சந்தேகிக்கின்றனா்.

மேலும், கடை உரிமையாளரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருவதுடன், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவையும் போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.