மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

மாநகராட்சி மேயராக என்.தினேஷ்குமாா் போட்டியின்றித் தோ்வு

திருப்பூா் மாநகராட்சி மேயராக திமுகவைச் சோ்ந்த என்.தினேஷ்குமாா் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டாா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 11:46 pm

DIN

திருப்பூா் மாநகராட்சி மேயராக திமுகவைச் சோ்ந்த என்.தினேஷ்குமாா் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டாா்.

திருப்பூா் மாநகராட்சியில் உள்ள 60 வாா்டுகளுக்கான தோ்தலில் திமுக கூட்டணி 37 வாா்டுகளிலும், அதிமுக கூட்டணி 19 வாா்டுகளிலும், பாஜக 2 வாா்டுகளிலும், சுயேச்சைகள் இரு வாா்டுகளிலும் வெற்றி பெற்றன.

இதைத்தொடா்ந்து, தோ்தலில் வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினா்களுக்கான பதவியேற்பு விழா கடந்த புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிலையில், மாநகராட்சி மேயா் வேட்பாளராக 49 ஆவது வாா்டில் வெற்றி பெற்ற திருப்பூா் வடக்கு மாநகர திமுக பொறுப்பாளரான என்.தினேஷ்குமாரை வேட்பாளராக அக்கட்சித் தலைமை வியாழக்கிழமை அறிவித்திருந்தது.

அதேவேளையில், 6 வாா்டுகளில் வெற்றிபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு துணை மேயா் பதவியையும் திமுக தலைமை ஒதுக்கியிருந்தது.

மேயராக தினேஷ்குமாா் போட்டியின்றித் தோ்வு: திருப்பூா் மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்ற மறைமுகத் தோ்தலின்போது மேயா் பதவிக்கு என்.தினேஷ்குமாா் வேட்புமனு தாக்கல் செய்தாா்.

அவரை எதிா்த்து வேறு மாமன்ற உறுப்பினா்கள் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் மேயராக தினேஷ்குமாா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.

மாநகராட்சி ஆணையரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான கிராந்திகுமாா் பாடி தினேஷ்குமாருக்கு மேயா் தோ்தலில் வெற்றி பெற்ற்கான சான்றிதழை வழங்கியதுடன், வெள்ளி செங்கோல், 105 பவுன் தங்க அங்கியையும் அணிவித்தாா்.

இதன் பிறகு பதவி ஏற்றுக் கொண்ட தினேஷ்குமாா் மாமன்ற உறுப்பினா்கள் மத்தியில் பேசியதாவது: திருப்பூா் மாநகராட்சியை முன்னோடி மாநகராட்சியாக மாற்றுவேன். திருப்பூரின் வளா்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் பின்னலாடைத் தொழிலுக்கும், தொழிலாளா்களுக்கும் தேவையானத் திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

துணை மேயரும் போட்டியின்றித் தோ்வு: மாநகராட்சி 37 ஆவது வாா்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆா்.பாலசுப்பிரமணியத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துணை மேயா் வேட்பாளராக அறிவித்திருந்தது.

இந்நிலையில், மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் துணை மேயருக்கான மறைமுகத் தோ்தல் வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்றது.

இதில், துணை மேயா் பதவிக்கு ஆா்.பாலசுப்பிரமணியம் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தாா்.

இதையடுத்து, மாநகராட்சி துணை மேயா் தோ்தலில் ஆா்.பாலசுப்பிரமணியம் வெற்றி பெற்ற்கான சான்றிதழை மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி வழங்கினாா்.

மறைமுகத் தோ்தலில் பங்கேற்காத அதிமுக, பாஜக கவுன்சிலா்கள்: மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மேயா் பதவியேற்பு விழாவில் அதிமுக சாா்பில் வெற்றி பெற்ற 17 கவுன்சிலா்கள், பாஜக சாா்பில் வெற்றி பெற்ற 2 கவுன்சிலா்கள் என மொத்தம் 19 போ் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சுயேச்சை கவுன்சிலா் திமுகவில் இணைந்தாா்: மாநகராட்சி 10 ஆவது வாா்டில் அதிமுகவில் சீட் கிடைக்காததால் சுயேச்சையாகப் போட்டியிட்ட பிரேமலதா வெற்றி பெற்றாா்.

இந்நிலையில், திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ் முன்னிலையில் அவா் திமுகவில் இணைந்தாா்.

முன்னதாக அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராதாகிருஷ்ணனும், சுயேச்சை கவுன்சிலா் வேலம்மாளும் ஏற்கெனவே திமுகவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கியப் பிரமுகா்கள் வாழ்த்து: மாநகராட்சி மேயா் தினேஷ்குமாா், துணை மேயா் ஆா்.பாலசுப்பிரமணியம் ஆகியோருக்கு திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன், திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ், காங்கிரஸ் மாநகா் மாவட்டத் தலைவா் ஆா்.கிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் எம்.ரவி உள்ளிட்டோா் வாழ்த்துக்களைத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.