/

கார், இருசக்கர வாகனம் மோதி விபத்து: தந்தை, ஒன்றரை வயது குழந்தை பலி

அவிநாசி அருகே பட்டறை பேருந்து நிறுத்ததில் கார், இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் தந்தை, ஒன்றரை வயது குழந்தை ஆகியோர் சனிக்கிழமை இரவு உயிரழந்தனர்.

News image
கார், இருசக்கர வாகனம் மோதி விபத்து: தந்தை, ஒன்றரை வயது குழந்தை பலி
Updated On :1 பிப்ரவரி 2024, 8:35 am

DIN

அவிநாசி அருகே பட்டறை பேருந்து நிறுத்ததில் கார், இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் தந்தை, ஒன்றரை வயது குழந்தை ஆகியோர் சனிக்கிழமை இரவு உயிரழந்தனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி சூளை பகுதியில் வசித்து வருபவர் சின்ராஜ் மகன் தங்கராஜ்(31). இவருக்கு ஒன்றரை வயதில் லக்சன்யா என்ற குழந்தை உள்ளது. இந்நிலையில் தங்கராஜ் தனது குழந்தை லக்சன்யாவுடன் இரு சக்கர வாகனத்தில் பட்டறை பேருந்து நிறுத்தம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கார், இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த தந்தை தங்கராஜ், குழந்தை லக்சன்யா ஆகியோர் பலத்த காயமடைந்து சம்பவயிடத்திலேயே உயிரிழந்தனர். 

உடனடியாக அவர்களது உடலை மீட்ட காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து அவிநாசி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.