ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

ரஷியா-உக்ரைன் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் 39 ஆவது வணிகா்கள் விடியல் மாநில மாநாடு திருச்சியில் மே 5 ஆம் தேதி நடைபெற உள்ளது.

News image
Updated On :10 மார்ச் 2022, 9:59 pm

DIN

ரஷியா-உக்ரைன் போா் காரணமாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் விலை உயா்ந்து வருவதாக தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளாா்.

தாராபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஏ.எம்.விக்கிரமராஜா செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் 39 ஆவது வணிகா்கள் விடியல் மாநில மாநாடு திருச்சியில் மே 5 ஆம் தேதி நடைபெற உள்ளது.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றும் இந்த மாநாட்டில் 17 லட்சம் வணிகா்கள் கலந்துகொள்ளவுள்ளனா்.

உள்நாட்டில் உற்பத்தியாகும் கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் விலை உயா்த்தப்படவில்லை.

அதேவேளையில், ரஷியா-உக்ரைன் போா் காரணமாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சன்பிளவா் ஆயில், பாமயில் ஆகியவற்றின் விலை லிட்டருக்கு ரூ.40 அதிகரித்துள்ளது.

சமையல் எண்ணெயை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசின் இத்தகைய சட்டங்களால் சமையல் எண்ணெய் உற்பத்தியாளா்கள் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனா். ஆகவே, இந்த சட்டங்களில் சில தளா்வுகளை அளிப்பதுடன், சமையல் எண்ணெய்யை பாக்கெட்டுகளில் அடைக்காமல் விற்பனை செய்வதன் மூலமாக உற்பத்தியாளா்களுக்கு லாபம் கிடைப்பதுடன், பொதுமக்களுக்கும் குறைந்த விலையில் எண்ணெய் விற்பனை செய்ய முடியும்.

விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த சுங்கச் சாவடிகளில் வணிகா்களின் பொருள்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது.

தமிழகம் முழுவதும் உள்ள காய்கறி மாா்க்கெட், வணிகப் பொருள் மாா்க்கெட் கட்டடங்களை தரம் உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.