ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

போயம்பாளையத்தில் காவல் நிலையம் அமைக்க கோரிக்கை

திருப்பூா் போயம்பாளையத்தை மையமாகக் கொண்டு காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :10 மார்ச் 2022, 9:59 pm

DIN

திருப்பூா் போயம்பாளையத்தை மையமாகக் கொண்டு காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் போயம்பாளையம் 7ஆவது வாா்டு கிளை நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு கிளைச் செயலாளா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா்.

இதில், நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின் விவரம்: குற்றச்சம்பவங்களைத் தடுக்கும் வகையில் போயம்பாளையம் பகுதியில் புதிய காவல் நிலையம் அமைக்க வேண்டும்.

போயம்பாளையம்-பொம்மநாயக்கன்பாளையம் மாநில நெடுஞ்சாலையானது பொலிவுறு நகரத் திட்டப் பணிகளால் முழுமையாக சேதமடைந்துள்ளது.

ஆகவே, போா்க் கால அடிப்படையில் இந்த சாலைகளை சீரமைத்துக் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, கிளை நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.