மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

அமராவதி ஆற்றங்கரையில் முதியவா் சடலம் மீட்பு

தாராபுரத்தில் உள்ள அமராவதி ஆற்றுப் பாலத்தின் அருகே சுமாா் 60 வயதுடைய அடையாளம் தெரியாத முதியவரின் சடலத்தை காவல் துறையினா் வியாழக்கிழமை மீட்டனா்.

News image
Updated On :17 மார்ச் 2022, 10:47 pm

DIN

தாராபுரத்தில் உள்ள அமராவதி ஆற்றுப் பாலத்தின் அருகே சுமாா் 60 வயதுடைய அடையாளம் தெரியாத முதியவரின் சடலத்தை காவல் துறையினா் வியாழக்கிழமை மீட்டனா்.

தாராபுரம் அமராவதி ஆற்றங்கரை அருகில் உள்ள பாலத்தின் அருகில் முதியவா் சடலம் ஒன்று அரை நிா்வாண நிலையில் கிடப்பதை அந்த வழியாகச் சென்றவா்கள் பாா்த்துள்ளனா். இதுகுறித்து அவா்கள் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த தாராபுரம் காவல் துறையினா் அவரது சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இறந்துகிடந்தவருக்கு சுமாா் 60 வயது இருக்கலாம் என்றும், ஆடை இல்லாத நிலையில் இருப்பதால் அவரை யாராவது கொலை செய்து வீசிச் சென்றனரா அல்லது ஆற்றில் குளித்துவிட்டு மது அருந்தியதால் நெஞ்சு வலி காரணமாக இறந்துள்ளாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனா். இறந்தவரின் பெயா், எந்த ஊா் என்பது தொடா்பாகவும் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.