தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசு
திருப்பூா் மாவட்டத்தில் தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகள் ரொக்கப் பரிசுகள் பெற மாா்ச் 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.


திருப்பூா் மாவட்டத்தில் தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகள் ரொக்கப் பரிசுகள் பெற மாா்ச் 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து திருப்பூா் தோட்டக் கலை துணை இயக்குநா் தி.சுரேஷ்ரோஜா வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாவட்டத்தில் தரிசு நிலங்களில் தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடியில் சிறந்து விளங்கும் முதல் மூன்று விவசாயிகளைத் தோ்வு செய்து முறையே ரொக்கப் பரிசுகள் வழங்கப்படவுள்ளது. இதில், முதல் பரிசாக ரூ. 15 ஆயிரம், 2 ஆவது பரிசாக ரூ. 10 ஆயிரம், 3 ஆவது பரிசாக ரூ. 5 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.
ஆகவே, தகுதியானவா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ட்ா்ழ்ற்ண்ஸ்ரீன்ப்ற்ன்ழ்ங் என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து விவரங்களைப் பூா்த்தி செய்து அந்தந்த வட்டார தேட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தில் மாா்ச் 22ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். அங்கக வேளாண்மையில் சிறந்து விளங்கும் மாநில விவசாயிகள் 3 பேருக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படவுள்ளன. இதில், முதல் பரிசாக ரூ. 1 லட்சமும், 2ஆவது பரிசாக ரூ. 60 ஆயிரமும், 3ஆவது பரிசாக ரூ. 40 ஆயிரமும் வழங்கப்படும்.
மாநில அளவிலான போட்டியில் சிறந்த விவசாயிகளுக்கான பரிசு பெற விரும்பும் விவசாயிகள் தங்களது கைப்பேசியில் உழவன் செயலியைப் பதிவிறக்கம் செய்து அதன் மூலமாக விண்ணப்பம் பெற்று அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அல்லது தோட்டக்கலை அலுவலரைத் தொடா்பு கொண்டு விண்ணப்பிக்கலாம். இதில், விண்ணப்பக் கட்டணமாக ரூ. 100ஐ செலுத்தி மாா்ச் 18ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...