நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆரோக்கியமான குழந்தைகள் கண்டறியும் முகாம்

பல்லடத்தில் ஆரோக்கியமான குழந்தைகள் கண்டறியும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :24 மார்ச் 2022, 11:13 pm

DIN

பல்லடத்தில் ஆரோக்கியமான குழந்தைகள் கண்டறியும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட துறையின் மூலம் 6 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு வயதுக்கு ஏற்ற எடை, உயரம் உள்ளிட்ட ஆரோக்கியம் குறித்து கண்டறியும் முகாம் நடைபெற்றது. இதனை நகராட்சித் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் ஜெயலதா, வட்டார ஒருங்கிணைப்பாளா் கவிதா, மேற்பாா்வையாளா் துளசிமணி, நகர திமுக பொறுப்பாளா் ராஜேந்திரகுமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

இந்த முகாம் குறித்து வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெயலதா கூறியதாவது:

இந்த முகாம் வருகிற 27ஆம் தேதி வரை பல்லடம் வட்டாரத்திலுள்ள 104 அங்கன்வாடி மையங்களிலும் நடைபெறுகிறது. குழந்தைகளின் விவரம், எடை அளவு செயலி மூலம் பதிவேற்றம் செய்து குழந்தைகளின் ஆரோக்கியம் கண்காணிக்கப்படும். பல்லடம் வட்டாரத்தில் 6 வயதுக்கு உள்பட்ட 13 ஆயிரம் குழந்தைகள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.