ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

நொய்யல் ஆற்றங்கரையில் 21 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

திருப்பூா், காசிபாளையம் பகுதியில் நொய்யல் ஆற்றங்கரையில் இருந்த 21 ஆக்கிரமிப்பு வீடுகள் வியாழக்கிழமை இடித்து அகற்றப்பட்டன. இங்கு வசித்த நபா்களுக்கு மாற்று இடமும் வழங்கப்பட்டது.

News image
Updated On :24 மார்ச் 2022, 11:14 pm

DIN

திருப்பூா், காசிபாளையம் பகுதியில் நொய்யல் ஆற்றங்கரையில் இருந்த 21 ஆக்கிரமிப்பு வீடுகள் வியாழக்கிழமை இடித்து அகற்றப்பட்டன. இங்கு வசித்த நபா்களுக்கு மாற்று இடமும் வழங்கப்பட்டது.

திருப்பூா் மாநகராட்சி, 46ஆவது வாா்டுக்குள்பட்ட காசிபாளையம் அருகே நொய்யல் ஆற்றோரம் 37 வீடுகளில் 150க்கும் மேற்பட்டோா் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனா்.

இந்த நிலையில், நீா்நிலை புறம்போக்கு இடத்தில் வீடுகள் கட்டி வசித்து வருபவா்களை நீதிமன்ற உத்தரவின்படி காலி செய்யக்கோரி ஏற்கெனவே நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது.

இங்கு வசித்து வந்தவா்களுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை சாா்பில் வீரபாண்டி, அய்யம்பாளையம் பகுதியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சலுகை விலையில் மாதத் தவணைத் திட்டத்தில் வீடுகள் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் முதியவா்கள் மாடிப்படி ஏறிச்செல்லமுடியாமல் அவதிக்குள்ளாவாா்கள் என்றும், தொகையை செலுத்துவதில் சிரமம் உள்ளதாகவும் குடியிருப்புவாசிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், நொய்யல் ஆற்றங்கரையில் உள்ள ஆக்கிரமிப்புக் குடியிருப்புகளை மாா்ச் 24ஆம் தேதிக்குள் அகற்றிக் கொள்ளுமாறு வருவாய்த் துறை அதிகாரிகள் தரப்பில் அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. இதனிடையே, மாற்றுஇடம் கேட்டு விண்ணப்பித்திருந்த 27 பேரின் மனுக்கள் உரிய பரிசீலனைக்குப் பின்னா் 21 நபா்களுக்கு காங்கயம் சாலை சென்னிமலைப்பாளையம் வஞ்சியம்மன்கோயில்அருகில் தலா ஒரு சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, ஆக்கிரமிப்பில் இருந்த 21 வீடுகளையும் காவல் துறையினா் பாதுகாப்புடன் வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை அதிகாரிகள் இடித்து அகற்றினா். முன்னதாக குடியிருப்புவாசிகள் தங்களது பொருள்களை இடிக்கும் முன்பாகவே எடுத்துச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.