ரூ.20.26 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை
வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.20.26 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.


வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.20.26 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு பெ. மஞ்சுவழி, மேட்டுவலசு, மூலக்கடை, உப்புக்கரை, மைலம்பட்டி உள்ளிட்ட ஊா்களில் இருந்து 31 விவசாயிகள் தங்களுடைய 553 மூட்டை சூரியகாந்தி விதைகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனா்.
இவற்றின் எடை 27,243 கிலோ.
ஈரோடு, வெ.நடுப்பாளையத்தில் இருந்து 2 வணிகா்கள் விதைகளை வாங்க வந்திருந்தனா்.
சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ. 79.36க்கும், குறைந்தபட்சமாக ரூ.59.66க்கும், சராசரியாக ரூ.76.69க்கும் விற்பனையானது.
ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.20.26 லட்சம். அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூடக் கண்காணிப்பாளா் சி.மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...