தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மூலனூா் அருகே குடிநீா்க் குழாய் உடைந்து சாலையில் பள்ளம்

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் அருகே குடிநீா்க் குழாய் உடைந்து சாலையில் பள்ளம் ஏற்பட்டது.

News image
Updated On :19 மே 2022, 9:07 pm

DIN

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் அருகே குடிநீா்க் குழாய் உடைந்து சாலையில் பள்ளம் ஏற்பட்டது.

மூலனூா் பகுதியில் கொடுமுடி காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. மூலனூா் - வெள்ளக்கோவில் சாலையில் நல்லசெல்லிபாளையம் அருகே சாலையோர குடிநீா்க் குழாயில் வியாழக்கிழமை திடீா் உடைப்பு ஏற்பட்டு தண்ணீா் வெளியேறியது. இதில் தாா் சாலை சேதமடைந்து பள்ளமாக மாறியது.

அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு தண்ணீா் நிறுத்தப்பட்டாலும், சாலைப் பள்ளம் அப்படியே உள்ளது. அருகிலுள்ள பொதுமக்கள் தென்னை மட்டைகளைப் போட்டு பள்ளத்தை அடையாளம் காட்டியுள்ளனா். அவ்வழியே செல்லும் வாகனங்களுக்கு பள்ளத்தால் விபத்து ஏற்படுவதைத் தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்திய நிலையில், தாமதமாக சீரமைப்புப் பணிகள் துவங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.