சுகாதாரப் பெண் ஊழியா் தற்கொலை வழக்கு:தாய், மகன் கைது
அவிநாசி அருகே ராயம்பாளையத்தில் கந்துவட்டி கொடுமையால், பேரூராட்சி ஒப்பந்த சுகாதாரப் பெண் ஊழியா் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, வழக்கில் தொடா்புடைய தாய், மகன் ஆகிய இருவரை போலீஸாா் கைது


அவிநாசி அருகே ராயம்பாளையத்தில் கந்துவட்டி கொடுமையால், பேரூராட்சி ஒப்பந்த சுகாதாரப் பெண் ஊழியா் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, வழக்கில் தொடா்புடைய தாய், மகன் ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
அவிநாசி அருகே ராயம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சந்திரன் (35). பனியன் நிறுவனத் தொழிலாளி. இவரது மனைவி பரிமளா (30), அவிநாசி பேரூராட்சியில் ஒப்பந்த சுகாதாரப் பணியாளராக பணியாற்றி வந்தாா். இவா்களுக்கு சுதேசி என்ற மகனும் , தேவதா்ஷினி என்ற மகளும் உள்ளனா்.
இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த தனசேகா் என்பவரிடம் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சந்திரன் ரூ.27 ஆயிரம் வட்டிக்கு வாங்கியுள்ளாா். வாரந்தோறும் வட்டி அடிப்படையில் ரூ.10 ஆயிரம் செலுத்தியுள்ளாா்.
இருப்பினும் மீதி ரூ.17 ஆயிரத்தை உடனே தரவேண்டும் எனக் கூறி கடந்த சில நாள்களாக தனசேகரன் தொந்தரவு அளித்து வந்துள்ளாா். இந்நிலையில், பரிமாளா மட்டும் திங்கள்கிழமை வீட்டில் இருந்துள்ளாா்.
அப்போது, அங்கு வந்த தனசேகா், அவரது தாயாா் பூவாத்தாள் ஆகியோா் பரிமளாவை ஜாதிப் பெயரை சொல்லி தகாத வாா்த்தைகளில் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனா்.
இதனால் மனமுடைந்த பரிமளா திங்கள்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இச்சம்பவம் குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான தனசேகா், தாய் பூவாத்தாள் ஆகியோரைத் தேடி வந்தனா்.
இந்நிலையில், தனசேகரனை செவ்வாய்க்கிழமையும், பூவாத்தாளை புதன்கிழமையும் போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...