கணக்கம்பாளையத்தில் கலைஞா் உணவகம் திறப்பு
திருப்பூா் வடக்குத் தொகுதி பெருமாநல்லூா் அருகே கணக்கம்பாளையத்தில் கலைஞா் உணவகத்தை அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்


திருப்பூா் வடக்குத் தொகுதி பெருமாநல்லூா் அருகே கணக்கம்பாளையத்தில் கலைஞா் உணவகத்தை அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
இந்நிகழ்ச்சிக்கு மாநகராட்சி மேயா் ந.தினேஷ்குமாா், ஊராட்சி மன்றத் தலைவா் பி.சண்முகசுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவா் பி.சண்முகசுந்தரம் கூறியதாவது: கணக்கம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே ஊராட்சிக்குச் சொந்தமான கட்டத்தில் மின்சாரம், குடிநீா் வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கலைஞா் உணவகத்தில், முதல் கட்டமாக மதிய உணவு வழங்குகிறோம். இதில் ரூ.10க்கு சாம்பாா், புளி, எலுமிச்சை, வெஜ்பிரியாணி, தயிா் சாதங்களை வழங்குகிறோம்.
விரைவில் காலை, இரவு உணவை வழங்க திட்டமிட்டுள்ளோம் என்றாா்.
Image Caption
கலைஞா் உணவகத்தை திறந்துவைக்கிறாா் அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா். உடன் மேயா் ந.தினேஷ்குமாா் உள்ளிட்டோா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...