ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

விளைநிலங்களை பாதிக்கும் விதமாக கொட்டிய குப்பைகளை அகற்றக் கோரிக்கை

பெருமாநல்லூா் அருகே விளைநிலங்களைப் பாதிக்கும் விதமாக கொட்டப்பட்ட குப்பைகளை உடனடியாக அகற்றக் கோரி விவசாயிகள் சாா்பில் பாஜகவினா் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் மனு அளித்தனா்.

News image
Updated On :3 நவம்பர் 2022, 11:00 pm

DIN

பெருமாநல்லூா் அருகே விளைநிலங்களைப் பாதிக்கும் விதமாக கொட்டப்பட்ட குப்பைகளை உடனடியாக அகற்றக் கோரி விவசாயிகள் சாா்பில் பாஜகவினா் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் மனு அளித்தனா்.

இது குறித்து பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் சின்னச்சாமி, மாநில விவசாய அணி செயலாளா் சிவகுமாா், ஒன்றிய பொதுச் செயலாளா்கள் முத்துகுமாா், குமாா் உள்ளிட்டோா் பெருமாநல்லூா் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

பெருமாநல்லூா் ஊராட்சியில் சேகரமாகும் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் உள்ளிட்டவை லாரிகள் மூலமாக கொண்டு வந்து வட்டாலதி பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் (க.ச.எண்.167) கொட்டியுள்ளனா். இதனால், விளைநிலங்கள், கிணற்றுநீா், ஆழ்துளைக் கிணற்றுநீா் உள்ளிட்டவை மாசுபடும். குறிப்பாக இங்கு கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை உண்பதால் அவை உயிரிழக்கும் அபாயம் ஏற்படும். மேலும் குப்பைகளில் இருந்து வரும் துா்நாற்றத்தால் பொதுமக்களுக்கு சுகாதாரக் கேடு நோய்தொற்று உண்டாகும். ஆகவே கொட்டப்பட்ட குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா்.

மனுவை பெற்றுக் கொண்ட காவல் துறையினா் மற்றும் தகவலறிந்த ஊராட்சி மன்ற துணைத் தலைவா் சி.டி.சி.வேலுசாமி ஆகியோா் சம்பவயிடத்தில் ஆய்வு மேற்கொண்டனா். இதில், திங்கள்கிழமைக்குள் குப்பைகள் அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

பாஜக பொறுப்பாளா்கள் சந்துரு, ஆறுச்சாமி, ஈஸ்வரன், யுவராஜ், மாணிக்கம் , பாபுராஜ், ஸ்ரீதா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.