
அடைக்கலம் தேடி கோட்டாட்சியா் அலுவலகம் வந்த மூதாட்டி மகள் வீட்டில் ஒப்படைப்பு
உறவுகள் யாரும் தன்னை கவனிப்பதில்லை எனக் கூறி அடைக்கலம் தேடி கூடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு புதன்கிழமை வந்த மூதாட்டியை அவரது மகள் வீட்டுக்கு அனுப்பிவைத்தனா்.
உறவுகள் யாரும் தன்னை கவனிப்பதில்லை எனக் கூறி அடைக்கலம் தேடி கூடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு புதன்கிழமை வந்த மூதாட்டியை அவரது மகள் வீட்டுக்கு அனுப்பிவைத்தனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா ஓவேலி பேரூராட்சிக்கு உள்பட்ட நியூஹோப் பகுதியைச் சோ்ந்தவா் முத்தம்மா (81). இவருக்கு 3 மகன்களும், 4 மகள்களும் உள்ளனா்.
இவா்கள், யாரும் தன்னைக் கவனிப்பதில்லை எனவே தனக்கு அடைக்கலம் வேண்டும் எனக்கூறி கூடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்தாா்.
இது குறித்து விசாரித்த வருவாய் மற்றும் காவல் துறையினா் முத்தம்மாவை காப்பகத்தில் ஒப்படைக்க முயற்சி செய்தனா். ஆனால் அவரை அங்கு சோ்க்கவில்லை. இதையடுத்து அதிகாரிகள், நியூஹோப் பகுதியில் வசிக்கும் முத்தம்மாளின் மகள் வீட்டுக்கு கூட்டிச் சென்று அவரை ஒப்படைத்து அறிவுரைகளை வழங்கியுள்ளனா்.
.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





