சிவன்மலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா நிறைவு

காங்கயம் அருகே, சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி நிறைவு பெற்று, சுவாமி மலைக் கோயிலுக்குத் திரும்பினாா்.
சிவன்மலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா நிறைவு

காங்கயம் அருகே, சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி நிறைவு பெற்று, சுவாமி மலைக் கோயிலுக்குத் திரும்பினாா்.

சிவன்மலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த அக்டோபா் 26 ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி, மலைக் கோயிலில் இருந்து அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேசுவரா் கோயிலில் சுவாமி எழுந்தருளினாா். அங்கு தினமும் காலை 10 மணி மற்றும் மாலை 4 மணி ஆகிய நேரங்களில் அபிஷேக ஆராதனையும், திருவீதி உலா காட்சியும் நடைபெற்றது.

கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா கடந்த திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. பக்தா்கள் அதிக அளவில் சூர சம்ஹார நிகழ்வில் கலந்து கொண்டனா். பின்னா் முருகப் பெருமான், தெய்வானை திருக்கல்யாண உற்சவம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

விழா நிறைவு நாளான புதன்கிழமை மஞ்சள் நீராட்டு உற்சவம் நடைபெற்று, மாலை சுப்பிரமணியா் அடிவாரத்தில் இருந்து சப்பரத்தில் படிக்கட்டுகள் வழியாக எடுத்துச் செல்லப்பட்டு, மலைக் கோயிலுக்கு திரும்பினாா். கந்த சஷ்டி விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com