டிக்டாக் பிரச்னை! திருப்பூரில் மனைவி கொலை, கணவர் கைது
திருப்பூரில் டிக்டாக் பிரச்னையால் மனைவியை கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


திருப்பூரில் டிக்டாக் பிரச்னையால் மனைவியை கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் செல்லம் நகரைச் சேர்ந்தவர் அமிர்தலிங்கம் (38). இவரது மனைவி சித்ரா (35). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். சித்ரா அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இதன் பின்னர் சமூக வலைதளமான டிக் டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் விடியோ பதிவிடுவதில் ஆர்வமாக இருந்தார். இதனை அமிர்தலிங்கம் கண்டித்து வந்துள்ளார். இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு டிக் டாக் மூலம் அறிமுகமான நபர்களுடன் சென்னைக்கு சென்று சினிமாவில் நடிக்க சென்றதாக தெரிகிறது. இதற்கு அமர்ந்தலிங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதனையும் மீறி சித்ரா சென்னைக்கு சென்று சில மாதங்கள் இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த வாரம் சென்னையில் இருந்து சித்ரா திருப்பூருக்கு திரும்பி வந்துள்ளார். இது தொடர்பாக கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்றும் இரவு தகராறு நடந்துள்ளது. இதனால் கோபித்துக் கொண்டு சித்ரா அந்த பகுதியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் மற்றும் அவர்களது மகள்கள் இருவரையும் சமாதானப்படுத்தி உள்ளனர். இதன் பின்னர் சித்ராவை வீட்டிற்கு செல்லுமாறு அனுப்பி வைத்துள்ளனர்.
இதையும் படிக்க- நாய்ப் பாசம்! விபத்தில் சிக்கிய நண்பனை காப்பாற்ற போராடிய நாய்கள்
இதற்கிடையே காலை நீண்ட நேரமாக அவர்களது வீட்டு கதவு திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்த போது, கழுத்தில் காயங்களுடன் அங்கே சித்ரா கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இது குறித்து மத்திய போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அமிர்தலிங்கத்தை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கழுத்தில் காயம் இருப்பதால், துப்பட்டா அல்லது சேலை போன்றவற்றைக்கொண்டு இறுக்கி அமிர்தலிங்கம் கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...