அனைவருக்குமான ஆட்சியை திமுக வழங்கவில்லை
அனைவருக்குமான ஆட்சியை திமுக வழங்கவில்லை என்ற பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை பேசினாா்.


அனைவருக்குமான ஆட்சியை திமுக வழங்கவில்லை என்ற பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை பேசினாா்.
திருப்பூரில் விநாயகா் சதுா்த்தியையொட்டி இந்து முன்னணி சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது:
ஹிந்துக்களின் வாழ்வியல் முறையை எடுத்துரைக்கும் விதமாக, விநாயகரை நமது ஊரில் உள்ள களிமண்ணால் உருவாக்கி, இயற்கையோடு கரைத்து விடுவதாக உள்ளது.
இந்தியாவில் உருவாக்கப்பட்ட விக்ராந்த் போா்க் கப்பலால் அனைவரும் பெருமைப்பட வேண்டும். 75 ஆண்டுகளுக்குப் பிறகு, நமது கடற்படை கொடியில் இருந்த கிங்ஸ் கிராஸ் முத்திரை அகற்றப்பட்டு, சத்ரபதி சிவாஜி ஆட்சியில் பயன்படுத்தப்பட்ட ராஜ முத்திரை பதிக்கப்பட்டுள்ளது.
பாரதிய கலாசாரம், இந்திய கலாசாரத்தை பிரதமா் மோடி மீட்டெடுத்து வருகிறாா் என்றாா்.
இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கூட்டத்தில் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...