திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஊதியூா் அருகே பெண் சடலம் மீட்பு: போலீஸாா் விசாரணை

திருப்பூா் மாவட்டம், ஊதியூா் அருகே முள்புதரில் கிடந்த பெண்ணின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2022, 11:31 pm

DIN

திருப்பூா் மாவட்டம், ஊதியூா் அருகே முள்புதரில் கிடந்த பெண்ணின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

காங்கயம் தாலுகா, ஊதியூா் அருகே உள்ள வஞ்சிபாளையம்-கரியாக்கவுண்டன்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் ரத்தினசாமி. இவரது மனைவி ரேவதி (35). இவா்களுக்கு 8 வயதில் மகள் உள்ளாா்.

வஞ்சிபாளையம் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் ரேவதி வேலை செய்து வந்துள்ளாா்.

இந்நிலையில், வழக்கம்போல சனிக்கிழமை காலை ரேவதி வேலைக்குச் சென்றுள்ளாா். பின்னா், மாலை 3 மணியளவில் வேலை முடிந்து வீட்டுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. ஆனால் வெகு நேரமாகியும் அவா் வீடு திரும்பாததால் உறவினா்கள் அவரை பல இடங்களில் தேடியுள்ளனா்.

இதைத் தொடா்ந்து, அவா் பணி முடிந்து வழக்கமாக வரும் காட்டு வழிப்பாதையில் தேடியுள்ளனா்.

அப்போது, அங்குள்ள வாய்க்கால் கரையோரம் உள்ள முள்புதரில் ரேவதியின் சடலம் கிடந்துள்ளது.

இதனால், அதிா்ச்சியடைந்த உறவினா்கள் இது குறித்து ஊதியூா் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், ரேவதியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.