திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

தாராபுரம் அருகே பழனி கோயிலுக்குச் சொந்தமான ரூ.25 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு  

தாராபுரம் அருகே பழனி கோயிலுக்குச் சொந்தமான ரூ.25 கோடி மதிப்புள்ள 60 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை மீட்டனர்.

News image
தாராபுரத்தை அடுத்துள்ள பெரியகுமாரபாளையம் கிராமத்தில் பழனி கோயிலுக்குச் சொந்தமான ரூ.25 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலத்தை திங்கள்கிழமை மீட்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள்.
Updated On :9 மே 2022, 12:30 pm

DIN

தாராபுரம் அருகே பழனி கோயிலுக்குச் சொந்தமான ரூ.25 கோடி மதிப்புள்ள 60 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை மீட்டனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் பெரியகுமாரபாளையம் கிராமத்தில் பழனி பாலதண்டாயுதபாணி கோயிலுக்குச் சொந்தமான 60 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருந்தனர். இந்த நிலங்கள் தங்களுக்கு சொந்தமான எனக்கூறி தாராபுரம் சார்பு நீதிமன்றம், கோவை மாவட்ட அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம், தில்லி உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் வழக்குத் தொடுத்திருந்தனர். 

இதனை எதிர்த்து கோயில் நிர்வாகத்தின் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கின் இறுதித் தீர்ப்பில் இந்த நிலங்கள் அனைத்தும் பழனி கோயிலிக்குச் சொந்தமான என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, திண்டுக்கல் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அனிதா, பழனி சரக ஆய்வாளர் ஜெ.கண்ணன் ஆகியோர் பழனி பாலதண்டாயுதபாணி கோயில் இணை ஆணையர் என்.நடராஜனிடம் நிலத்தை திங்கள்கிழமை ஒப்படைத்தனர். 

Story image

மேலும் கோயிலுக்குச் சொந்தமான என்ற அறிவிப்பு பதாகையும் ஆக்கிரமிப்பு நிலங்களில் வைக்கப்பட்டது. கடந்த 40 ஆண்டு சட்டப்போராட்டத்துக்குப் பின்னர் மீட்கப்பட்ட 60 ஏக்கர் நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.25 கோடியாகும் என்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.