வரலாற்றுச் சிறப்பு மிக்க கண்ணபுரம் மாட்டுச்சந்தை தொடங்கியது

வெள்ளக்கோவில் அருகே வரலாற்றுச் சிறப்பு மிக்க கண்ணபுரம் மாட்டுச்சந்தை வெள்ளிக்கிழமை தொடங்கியது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க கண்ணபுரம் மாட்டுச்சந்தை தொடங்கியது

வெள்ளக்கோவில் அருகே வரலாற்றுச் சிறப்பு மிக்க கண்ணபுரம் மாட்டுச்சந்தை வெள்ளிக்கிழமை தொடங்கியது.

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகேயுள்ள கண்ணபுரத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு 7 நாள்களுக்கு காங்கயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை நடைபெறும். மன்னராட்சிக் காலத்திலிருந்து இந்தச் சந்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மாட்டுச்சந்தை வெள்ளிக்கிழமை தொடங்கியது.

சந்தைக்கு முதல் நாளில் திருப்பூா் மாவட்டம் உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2 ஆயிரம் காங்கயம் இன மாடுகள், ஜல்லிக்கட்டு காளைகள், பூச்சிக் காளைகள், எருதுகள் ஆகியவற்றை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

2 வயதுடைய கிடாரிக் கன்று ரூ.75 ஆயிரம், 2 வயது காளைக்கன்று ரூ.70 ஆயிரம், கறவை மாடு ரூ. 1 லட்சம் முதல் ரூ. 2.25 லட்சம், காளை ரூ.3 லட்சம் என விலை கூறப்படுகிறது. சில குதிரைகளும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து மாடுகளை வாங்க வருபவா்கள் முழுமையாக வந்த பிறகு தான் சந்தை களைகட்டும் எனக் கூறப்படுகிறது. வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் சாா்பில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com