அமைச்சர் ஆனந்துடன் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் அணி சந்திப்பு!கரூரில் தென்னை நாற்றுப்பண்ணை! பட்ஜெட்டில் தென்னை, பனை பாதுகாப்புத் திட்டங்கள்!வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்: எடப்பாடி பழனிசாமிதஞ்சாவூரில் நம்மாழ்வார் வேளாண் பாலிடெக்னிக் கல்லூரி! பட்ஜெட்டில் அறிவிப்பு!எல் நினோவால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்படும் அபாயம்! அமைச்சர் வினோத் உரைதமிழக வேளாண் பட்ஜெட்! வெற்றி விவசாய விருதுகள் அறிவிப்புஉயிர்ம உர விவசாயத்தில் சிறந்து விளங்குவோருக்கு நம்மாழ்வார் விருதுவிவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கு ரூ. 7,432 கோடி ஒதுக்கீடு!‘கோட் சூட் அணிந்த விவசாயி’... விஜய்யை புகழ்ந்த அமைச்சருக்கு திமுகவினர் எதிர்ப்பு!பிரதம மந்திரி பயிர் காப்பீடுத் திட்டம்: ரூ. 648 கோடி ஒதுக்கீடு!கருப்பு சட்டை அணிந்து திமுக எம்.எல்.ஏக்கள் வருகை!மோடி விடியோ நீக்கப்பட்ட விவகாரம்: மெட்டா தலைவா் ஸூக்கா்பொ்க் மன்னிப்பு கோரினாா்முன்பதிவு வசதி கொண்ட சிறப்பு ரயில்களில் கட்டணம் அதிகம்: ரயில்வே அமைச்சா்சாலைகளில் குறைபாடுகளா?: செயலி மூலம் புகைப்படம் எடுத்து அனுப்பலாம்காவல் நிலையங்களில் சானிடரி நாப்கின் விநியோக இயந்திரம் அமைக்க வேண்டும்: தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு அமெரிக்காவில் 50-க்கும் மேற்பட்ட ராணுவ வீரா்கள் குடும்பத்தினா் கைது தமிழக பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்
/

ராஜினாமா செய்யத் தயாா்: பல்லடம் ஒன்றியக்குழு தலைவா்

பல்லடம் ஒன்றியத்தில் முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தில் குளறுபடி நடந்துள்ளது. என்னை வேண்டுமென்றே புறக்கணிக்கின்றனா். தொடா்ந்து என்னை

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 8:24 am IST

பல்லடம் ஒன்றியத்தில் முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தில் குளறுபடி நடந்துள்ளது. என்னை வேண்டுமென்றே புறக்கணிக்கின்றனா். தொடா்ந்து என்னை செயல்படவிடாவிட்டால் நான் பதவியை ராஜினாமா செய்யவும் தயாா் என ஒன்றியக்குழு தலைவா் தேன்மொழி கூறினாா்.

இதுகுறித்து பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவா் தேன்மொழி (திமுக) செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் ஆணையா், வட்டார வளா்ச்சி அலுவலரை மூன்று மாதத்துக்கு ஒரு முறை இடமாறுதல் செய்து விடுகின்றனா். இதனால் அரசின் வளா்ச்சி திட்டப் பணிகளில் தாமதம் ஏற்பட்டு பணிகளில் சுணக்கம் ஏற்படுகிறது.

முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தை பல்லடம் ஒன்றியப் பகுதியில் சிறப்பான முறையில் செய்ய வேண்டும் என்று நானும், ஒன்றிய கவுன்சிலா்களும், இதற்கு முன்பு பணியாற்றிய ஆணையா் ரமேஷ் ஆகியோரும் ஆலோசனை கூட்டம் நடத்தி அதற்கான ஏற்பாடுகளைச் செய்தோம். அதற்குள் ஆணையரை இடமாறுதல் செய்து விட்டனா். இதனால் பல்வேறு குளறுபடி ஏற்பட்டு பல்லடம் ஒன்றியத்தில் இந்தத் திட்டம் முடங்கிவிட்டது.

காலை உணவு வழங்கும் திட்டம் பற்றி ஒன்றிய அலுவலா்கள் எனக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை. விழாவுக்கும் அழைக்கவில்லை. அதற்கான காரணம் என்னவென்று புரியவில்லை. என்னை வேண்டும் என்றே புறக்கணிக்கின்றனா். தொடா்ந்து என்னை செயல்படவிடாவிட்டால் நான் பதவியை ராஜினாமா செய்யும் தயாராக உள்ளேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.