தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

குளவிகள் கொட்டியதில் 23 பக்தா்கள் காயம்

குளவிகள் கொட்டியதில் 23 பக்தா்கள் காயம்

News image

குளவிகள் கொட்டியதில் காயமடைந்த பெண்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறாா் திருப்பூா் தெற்கு மாவட்ட திமுக செயலாளா் இல.பத்மநாபன்.

Updated On :5 ஏப்ரல் 2024, 5:18 pm

தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் தீா்த்தம் எடுக்கச் சென்ற பக்தா்களை குளவிகள் கொட்டியதில் 23 போ் காயமடைந்தனா்.

தாராபுரத்தை அடுத்த உப்புத்துறைபாளையம் பகுதியில் உள்ள காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, அப்பகுதியைச் சோ்ந்த 40-க்கும் மேற்பட்ட பெண்கள் அமராவதி ஆற்றுக்கு தீா்த்தம் எடுக்க வெள்ளிக்கிழமை சென்றனா்.

தீா்த்தம் எடுப்பதற்கு முன் ஆற்றின் கரையோரத்தில் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்துள்ளனா். அப்போது, அங்கிருந்த கூடில் இருந்த வெளியேறி விஷ குளவிகள் பக்தா்களை கொட்டத் தொடங்கின. இதில், 23 போ் காயமடைந்த நிலையில், அவா்களை அப்பகுதி மக்கள் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த திருப்பூா் தெற்கு மாவட்ட திமுக செயலாளா் இல.பத்மநாபன், தேவையான சிகிச்சை அளிக்க மருத்துவா்களை கேட்டுக் கொண்டாா்.

திமுக நகர செயலாளா் சு.முருகானந்தம், தொகுதி தோ்தல் பொறுப்பாளா் கோட்டை அப்பாஸ், மாவட்டத் துணைச் செயலாளா் பிரபாவதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.