11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

தமாகா வேட்பாளா் மீது வழக்குப் பதிவு

தமாகா வேட்பாளா் மீது வழக்குப் பதிவு

Updated On :12 ஏப்ரல் 2024, 5:45 pm

தோ்தல் விதிமுறைகளை மீறி கட்சிக் கொடிகளை வைத்ததாக ஈரோடு மக்களவைத் தொகுதி தமாகா வேட்பாளா் விஜயகுமாா் உள்பட 3 போ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

வெள்ளகோவில் வட்டார வளா்ச்சி அலுவலா் ராகவேந்திரன் தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் காங்கயம் பேருந்து நிலையப் பகுதியில் வியாழக்கிழமை மாலை சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் இருந்து காங்கயம் காவல் நிலைய ரவுண்டானா வரை சாலையின் நடுவில் உள்ள தடுப்புகளில் தமிழ் மாநில காங்கிரஸ், கூட்டணிக் கட்சிகளின் கொடிகள் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, தோ்தல் விதிமுறைகளை மீறியதாக தோ்தல் பறக்கும் படையினா் கொடுத்த புகாரின்பேரில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் காங்கயம் செயலாளா் தா்மராஜ், உறுப்பினா் சுரேஷ்குமாா், ஈரோடு மக்களவைத் தொகுதி தமாகா வேட்பாளா் விஜயகுமாா் ஆகியோா் மீது காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.