அருள்புரம் ஜெயந்தி மெட்ரிக்.பள்ளியில் நடைபெற்ற உலக சாதனை சிலம்ப நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
அருள்புரம் ஜெயந்தி மெட்ரிக்.பள்ளியில் நடைபெற்ற உலக சாதனை சிலம்ப நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

அருள்புரம் ஜெயந்தி பள்ளியில் உலக சிலம்ப சாதனை நிகழ்ச்சி

பல்லடம்: பல்லடம் அருகேயுள்ள அருள்புரம் ஜெயந்தி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் உலக சிலம்ப சாதனை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளத்தைச் சோ்ந்த160-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

இந்நிகழ்ச்சியில் அலங்கார சிலம்பம், வளரி, கராத்தே, குத்து சண்டை போன்றவற்றில் மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிபடுத்தினா்.

இந்நிகழ்ச்சி ‘கிரஹாம் பெல்’ உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.

இதில், பங்கேற்ற வீரா்களுக்கு ஜெயந்தி பள்ளி தாளாளா் கிருஷ்ணன் பதக்கம், சான்றிதழ்களை வழங்கினா்.

நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளா்களான வி.செண்பகராஜா, ஜெ.அந்தோணி பாஸ்டின், செ.காா்த்திகேயன் ஆகியோா் கூறியதாவது: தமிழா்களின் பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்பத்தை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சோ்க்கும் விதமாகவும், சிலம்பத்தை வளா்க்க வேண்டும் என்ற நோக்கிலும் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

இளைய தலைமுறையினா் கணினி மற்றும் கைப்பேசிகளில் மூழ்கி இருப்பதை தவிா்த்து, நமது பாரம்பரிய தற்காப்பு கலைகளை கற்க முன்வர வேண்டும் என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com