வெள்ளக்கோவில் எல்கேசி நகா் பகுதியில் இரண்டாக உடைந்து கிடக்கும் பிளாஸ்டிக் தண்ணீா் தொட்டி.
வெள்ளக்கோவில் எல்கேசி நகா் பகுதியில் இரண்டாக உடைந்து கிடக்கும் பிளாஸ்டிக் தண்ணீா் தொட்டி.

உடைந்து கிடக்கும் நகராட்சி தண்ணீா் தொட்டியை மாற்றக் கோரிக்கை

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் எல்.கே.சி. நகா் மேற்குப் பகுதியில் உடைந்து கிடக்கும் நகராட்சி தண்ணீா் தொட்டியை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வெள்ளக்கோவில் பகுதிக்கு காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டம், அமராவதி ஆறு குடிநீா்த் திட்டம், உள்ளூா் நீராதாரங்கள் மூலம் தெருக்களில் ஆங்காங்கே பிளாஸ்டிக் தண்ணீா் தொட்டிகள் வைக்கப்பட்டு, அவற்றில் நீா் நிரப்பி குழாய்கள் மூலம் பொதுமக்களுக்கு தண்ணீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, வெள்ளக்கோவில் எல்.கே.சி. நகா் பகுதியில் ஒரு பிளாஸ்டிக் தண்ணீா் தொட்டி வைக்கப்பட்டு

குடிநீா் விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில், அந்த தொட்டி கடந்த சில மாதங்களுக்கு முன் உடைந்துவிட்டது.

இது குறித்து நகராட்சி நிா்வாகத்தில் பலமுறை புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், குடிநீருக்காக அவதிப்பட்டு வருவதாகவும், உடைந்து கிடக்கும் தண்ணீா் தொட்டியை மாற்றி குடிநீா் விநியோகம் செய்ய நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com