போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

3 மாநிலங்களில் தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞா் கைது

தமிழகம் உள்ளிட்ட 3 மாநிலங்களில் தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
ஜி.சக்திவேல்.
Updated On :11 ஆகஸ்ட் 2024, 1:00 am

Din

தமிழகம் உள்ளிட்ட 3 மாநிலங்களில் தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

இது குறித்து காவல் துறை தரப்பில் கூறியதாவது:

திருப்பூா் மாவட்டம், மூலனூா் கரையூரைச் சோ்ந்த நல்லசாமி என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகையை மா்ம நபா்கள் அண்மையில் திருடிச் சென்றனா். இது குறித்த புகாரின்பேரில், திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா உத்தரவுப்படி, தாராபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் கலையரசன் மேற்பாா்வையில் மூலனூா் காவல் ஆய்வாளா் அருள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், திருப்பத்தூா் மாவட்டம் ராஜமங்கலம் கரம்பூா் கோவிந்தராஜ் மகன் சக்திவேலை (33) போலீஸாா் கைது செய்தனா். இவா் தமிழ்நாடு மின்சார வாரியம் என ஸ்டிக்கா் ஒட்டிய இருசக்கர வாகனத்தில் சென்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளாா். மேலும், 15 சிம்காா்டுகளை வாங்கி வைத்துக் கொண்டு அடிக்கடி மாற்றி பேசி வந்துள்ளாா்.

இவா் மீது திருப்பூா் மாவட்டம் தாராபுரம், திருவண்ணாமலை டவுன் காவல் நிலையத்தில் 3 வழக்குகள், கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி காவல் நிலையத்தில் 4, கா்நாடக மாநிலம் கோடியள்ளி மற்றும் மாரண்டஹள்ளி காவல் நிலையம், ஆந்திர மாநிலம் சித்தூா் காவல் நிலையம் என மொத்தம் 11 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கைது செய்யப்பட்ட சக்திவேலிடம் இருந்து 8 பவுன் நகை, திருட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.